KGF Chapter 2


  ஒருத்தன் வந்தான்... தீ பிடித்தது    திரை... ஒரிஜினல் பீஸ்ட்... நாடி நரம்பை புடைக்க வைக்கும் கே.ஜி.எப்-2!

Rating: 4.0/5
நடிகர்கள்: யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன்
இசை: ரவி பஸ்ரூர்
இயக்கம்: பிரசாந்த் நீல்

ராக்கி 

கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என முதல் பாகத்திலேயே தனது ஆளுமையை அதிரடி ஸ்டன்ட்டுகள் மற்றும் ஆக்‌ஷனில் காட்டிய ராக்கி பாய் இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுக்கும் காட்சியிலேயே ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளி உள்ளார். வயலென்ஸ் தனக்கு பிடிக்காது என்றும் ஆனால், வயலன்ஸுக்கு தன்னை பிடிக்கிறது என்றும் அவர் சொல்லும் காட்சிகள் டிரைலரை விட அதை எந்த இடத்தில் திரையில் சொல்லுகிறார் என்கிற காட்சி அட்டகாசம். முதல் பாகத்தில் அதிகம் உழைத்து விட்டோம். இரண்டாம் பாகத்தில் லேசாக நடித்தால் போதும் என நடிக்காமல், இந்த பாகத்திலும் முழு உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார் நடிகர் யாஷ்.

வில்லன் என்ட்ரி

கேஜிஎஃப் சாப்டர் 1ல் வில்லன் கருடா என்ட்ரி தாமதமாகத்தான் காட்டப்படும். ஆரம்பத்தில் இருந்தே ராக்கி பாயின் பேக்ரவுண்ட் பில்டப்புக்காக அதிக காட்சிகளை செலவு செய்திருப்பார்கள். இடைவேளை நேரத்தில் சிலையை திறந்து விட்டு வில்லன் கொடுக்கும் என்ட்ரி அசத்தலாக இருந்திருக்கும். ஆனால், இரண்டாம் பாகத்தில் கருடா இறந்த செய்தி அறிந்ததுமே மீண்டும் கேஜிஎஃப்பை அடைய வேண்டும் என்றும் ராக்கி பாயை துவம்சம் செய்ய வேண்டும் என்றும் அதீரா வரும் காட்சிகள் மிரட்டல். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சரியான என்ட்ரி சீன் கொடுத்துள்ளனர்.

படத்தின் பலம்

இயக்குநர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் படத்தின் மையக் கதையையே இரண்டாம் பாதியில் வைத்து விட்டுத் தான் முதல் பாதியை பில்டப் செய்யவே எடுத்திருந்தார். அதன் காரணமாக கதை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் இரண்டாம் பாகம் பெரிய அளவில் மிரட்டுவதே இந்த படத்திற்கான பலமாக பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை போலவே அதே டார்க் கலரில் படத்தை ஒளிப்பதிவு செய்து புவன் கெளடா அசத்தி உள்ளார். ரவி பஸ்ரூரின் பிஜிஎம் இசை ராக்கி பாய், அதீரா மற்றும் ராமிகா சென் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேவையான மாஸ் எலிவேஷன் உடன் ஸ்கோர் செய்துள்ளது.

ஸ்பாய்லர் அலர்ட்

கேஜிஎஃப் சாப்டர் 2வுடன் கேஜிஎஃப் சகாப்தம் முடிகிறதா? என்று பார்த்தால் அதுதான் இல்லை. கேஜிஎஃப் சாப்டர் 3க்கான விஷயத்தை கிளைமேக்ஸில் யார் பார்ப்பது போன்ற காட்சி செம ட்விஸ்ட். 3ம் பாகத்தில் மீண்டும் ராக்கி பாயின் ஆட்டம் எப்படி தொடரப் போகிறது. எத்தனை பேர் அவருக்கு எதிரிகளாக வரப் போகிறார்கள், இன்னும் எத்தனை பாகம் இந்த படம் இருக்கும் என்பது இயக்குநர் பிரசாந்த் நீல்-க்குத்தான் வெளிச்சம். மொத்தத்தில் கேஜிஎஃப் சாப்டர் 2 தியேட்டரில் மிஸ் பண்ணக் கூடாத படம்!

பிரதமர் பிரமாதம்

இந்தியாவின் தங்க சுரங்கத்தை ஒரு குறிப்பிட்ட கேங்ஸ்டர் கூட்டம் ஆட்சி செய்வதையும், உலகளவில் கடத்தல் மார்க்கெட் நடத்துவதையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்கிற வெறியுடன் பிரதமர் ராமிகா சென்னாக பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் பிரமாதப்படுத்தி உள்ளார். இந்திரா காந்தி என சொல்லி விட்டால் பிரச்சனை வரும் என்பதால் புனைவாக ராமிகா சென் கதாபாத்திரத்தை பிரதமர் ஆக்கி உள்ளனர்.



Comments